உள்நாடு

“வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை தரவும் “– திஸ்ஸ

(UTV | கொழும்பு) –

செலுத்திய கட்டுப்பணத்தை திருப்பித் தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி உரிய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.   அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தலுக்காக செலுத்திய கட்டுப்பணத்தை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவில் செலுத்திய பணத்தை அரசாங்கம் பயன்படுத்துவதை நாங்கள் பார்க்கிறோம். அது சட்டவிரோதமானது. எனவே கட்டுப்பணத்தை மீண்டும் வேட்பாளர்களிடம் வழங்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

அதேவேளை தேர்தலை நடாத்தக் கோரி நாங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைப்போம்” என திஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரான் ஜனாதிபதியை சஜித் ஏன் சந்திக்கவில்லை? காரணம் வெளியானது

‘சி யான் 06’ க்கு இலங்கை அனுமதி !

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது – சஜித்

editor