உலகம்

வேட்பாளராக களமிறங்கும் ட்ரம்ப்!

(UTV | கொழும்பு) –

அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு முன்பு நாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ளார். மீண்டும் அவர் ஜோபைடனை எதிர்த்து போட்டியிடவுள்ளார். ஆனால் இதே கட்சியை சேர்ந்தவரான நிக்கி ஹேலி (ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் தூதர்), வேட்பாளர் தேர்வில் போட்டியிலுள்ளார்.

இதுகுறித்து கட்சியின் தலைவரான ரோனா மெக்டேனியல் கூறும்போது, “ஹேலி மிகப்பெரிய பிரசாரத்தை நடத்தியிருந்தாலும், கட்சியினர் எங்கள் இறுதி வேட்பாளரை சுற்றி ஒன்றுபட வேண்டும். அது டொனால்ட் ட்ரம்பாக இருக்கப்போகிறது” என்று கூறி உள்ளார். இதற்கிடையே குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. அதில் 2024 ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவார் என்று முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரை 231 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : பலியானோர் எண்ணிக்கை 4,200 ஆக அதிகரிப்பு.

ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா