உலகம்

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

(UTV | கொழும்பு) –  புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அங்கு நேற்று ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது.

உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதால் இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் லண்டனில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இதனால் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆப்கானிஸ்தானில் தாலிபானின் இடைக்கால அமைச்சரவை

லண்டன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

உலக அளவில் 65 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு