வகைப்படுத்தப்படாத

வெள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் கடற்படையினர்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்குடன் அகுரேகொட பகுதியில் கடற்படையினர் தற்போது பல நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் நேற்று முன்தினம் கோட்டே மாநகர சபை பகுதியில் பத்தகான கால்வாய் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டனர்.

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்னவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கைகள் கடந்த ஜூன் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டத்துக்காக இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் அகழ் எந்திர இயந்திரம் மற்றும் கடற்படையின் ஒரு டிராக்டர் மற்றும் இரன்டு டிரக் வன்டிகள் பயன்படுத்தப்பட்டன.

இ;ந்த நிகழ்வில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா , பொது மக்கள் பிரதிநிதிகள் குழு, அகுரேகொட கடற்படை முகாம் கட்டளை அதிகாரி கேப்டன் தம்மிக உடுகம உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் 57 கடற்படை வீர்ர்கள் கலந்துகொன்டனர்.

Related posts

ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்?

ஜனாதிபதிக்கு அவுஸ்ரேலியாவில் அமோக வரவேற்பு

Two drug traffickers held by Navy in Hambantota