கிசு கிசு

வெள்ளை வேன் கலாசாரம் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்

(UTV|COLOMBO) – வெள்ளைவேன் கடத்தல்கள் குறித்து தகவல்களை வெளிப்படுத்தியவர்களிடத்தில் பக்க சார்பான விசாரணைகள் நடத்தப்பட்டு முழுமையான விடயங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“.. 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் ஜனநாயகம் மறுதலிக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் வெள்ளை வேன் கலாசாரம் அறிமுகமானது. இந்தக் கலாசாரம் நடைமுறையில் இருந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவை முற்றுப் பெற்றிருக்கவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலரும் என்னிடத்தில் நேரடியாகவும் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தான் குறித்த இருநபர்களும் வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பிலான விடங்களை பகிரங்கப்படுத்துவதற்கு முன்வந்திருந்தனர். குறித்த நபர்களிடத்தில் நான் அதற்கான சாட்சிகள் இருக்கின்றவா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கேட்டிருந்தேன்.

அந்த இரண்டு நபர்களும் நேரடியாக சட்சியத்தினைக் கொண்டிருப்பதாகவும் மற்றும் சில ஆவணங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் தான் வெள்ளை வேன் கடத்தல்கள் குறித்த தகவல்களை அவர்கள் மூலமாக நான் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தேன்.

மேலும் அவர்கள் தமக்கான பாதுகாப்பினை வழங்குமாறும் கோரியிருந்தார்கள். இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரிடத்தில் நானே கோரியதோடு உரியவர்களுக்கு பாதுகாப்பினை வழங்குமாறும் கோரியிருந்தேன்.

தற்போது அவர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவர்களிடத்தில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படுவது அவசியம் என்பதோடு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் தயாராகவும் இருக்கின்றேன்…” என்றார்.

Related posts

ஏ.ஆர்.ரஹ்மானையே பிரம்மிக்க வைத்த அந்த இளைஞர்!

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!

மகளுடன் கோலி-அனுஷ்கா தம்பதி [PHOTO]