உள்நாடு

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இலங்கையில் தென்னைப் பயிர்ச் செய்கையில் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் இன்று (05) கிளிநொச்சி விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் அம்பாள்குளம் பகுதியில் வடமாகாண தென்னை பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடலில் தென்னை பயிர்செய்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் பின் பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு உத்தியோகத்தர்களால் மருந்து தெளித்தும் காட்டப்பட்டப்பட்டது.

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

சிறிதரன் துயிலுமில்லத்தில் அஞ்சலி!

நாளை முதல் 5,000 பஸ்கள் சேவையில்