உள்நாடுசூடான செய்திகள் 1

வெள்ளைச்சீனி, பருப்பு, கோதுமை மாவின் விலைகள் குறைவடைகின்றன

இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் மொத்த விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாவாகவும்,

ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 190 ரூபாவிலிருந்து 175 ரூபாவாகவும்,

பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 350 ரூபாயிலிருந்து 285 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது தங்களிடம் போதியளவு வெள்ளைச் சீனி, கோதுமை மாவு மற்றும் பருப்பு கையிருப்பு உள்ளதாகவும்,

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை தடையின்றி வாங்க முடியும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

இராஜாங்க அமைச்சரிற்கு எதிரான வழக்கு ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவித்தல்