உள்நாடு

வெள்ளியன்று நீதிமன்றுக்கு விடுமுறை வேண்டாம்

(UTV | கொழும்பு) –   நீதித்துறை மற்றும் நீதித்துறை ஆணைக்குழுவின் கடமைகள் வெள்ளிக்கிழமைகளில் வழமையாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கோருகிறது.

அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தின் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் தங்களுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், நீதிமன்ற நடவடிக்கைகள் செல்லுபடியாகாத அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் காலத்திலும், நீதித்துறை சேவை அத்தியாவசியமான உறுதிப்பாட்டிற்கு உட்பட்டது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெள்ளிக்கிழமைகளில் அரசாங்கம் தொடர்பான பல வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும், அது நிறுத்தப்பட்டால், பொது மக்களுக்கும், ஏராளமான சட்ட வல்லுநர்களுக்கும் பெரும் அசௌகரியம் ஏற்படும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வலியுறுத்துகிறது.

கொவிட் நிலைமையை எதிர்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையான தாமதங்களை ஏற்படுத்தியிருப்பதால், மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கருதுகிறது.

எனவே, வாரத்தில் மூன்று நாட்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறாவிட்டால் மீண்டும் இதே நிலை ஏற்படும் என்பதால், வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கோருகிறது.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

SLFP உள்ளக பிரச்சினையை தீர்க்க முடியாது- தேர்தல்கள் ஆணையகம்

நாட்டில் மேலும் 376 பேருக்கு கொரோனா உறுதி

மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை