உள்நாடு

வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கவுள்ள விசேட கொடுப்பனவு!

(UTV | கொழும்பு) –

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பான தகவல்களை இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, ஜூலை மாதத்திற்கான சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்களின் கொடுப்பனவுகளுக்கான 2,684 மில்லியன் ரூபா நிதி அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் திறைசேரியால் வழங்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், முதியோர் கொடுப்பனவை தபால் நிலையங்களிலும் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களில் இருந்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு

புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

மைத்திரியின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை