வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தை கட்டிட உரிமையாளர் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆம் திகதி  மாலை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டடனர். சந்தேகநபர் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து மேலும் ஒரு பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

சரிந்துவீழ்ந்த கட்டிடம் தொடர்பில் களுபோவில திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார்.

வெள்ளவத்தையிலுள்ள சினிமா அரங்கத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த 5 மாடிக் கட்ட்டம் கடந்த 18 ஆம் இடிந்து வீழ்ந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியதில் 25 பேர் காயமடைந்ததுடன் இருவர் காணாமற் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களை மீட்பதற்கு புதிய வழிமுறைகள் நேற்று முன்தனம்  பகல் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் விளைவாக நேற்று முன்தினம் பிற்பகல் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஹட்டன் பகுதியைச் சேர்ந்த இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளதுடன், களுபோவில போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Related posts

காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது குண்டுவீச்சு

Corruption case against Wimal fixed for Aug. 08

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்