சூடான செய்திகள் 1

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்காக இழப்பீட்டை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாயக் காப்புறுதி திட்டத்தின் ஊடாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்ச் செய்கைக்காக ஏக்கர் ஒன்றிற்கு தலா 40 ஆயிரம் வீதம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விதை நெல்லை கொள்வனவு செய்வதற்காக 50 சதவீதமும், உரங்களை பெறுவதற்கான நிவாரணங்களும் வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் பணிப்புரையின் கீழ் இவை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Related posts

C350 – C360 வரையான பாகங்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன

மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் திடீர் என கைது

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்