சூடான செய்திகள் 1

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ரவிநாத ஆரியசிங்க

(UTV|COLOMBO)-இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான தூதுவர் ரவிநாத ஆர்யசிங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்யசிங்க நேற்று அமைச்சிற்கு வருகை தருகையில் தனது சக உத்தியோகத்தர்களினால் அவர் வரவேற்கப்பட்டார்.

இதற்கு முன்னர், 2018 ஏப்ரல் மாதம் முதல் தூதுவர் ஆர்யசிங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வணிகப் பிரிவின் மேலதிக செயலாளராக கடமையாற்றினார்.

1988ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு சேவைக்கு இணைந்த அவர், புது டில்லியின் இரண்டாம் செயலாளராகவும் (1989 – 1991), வொஷிங்டன் டி.சி.யில் அமைச்சராகவும், அதன் பின்னர் தூதுவர் அந்தஸ்த்துள்ள தூதரகத்தின் பிரதி தலைவராகவும் (2002 – 2006) கடமையாற்றினார். 2008 ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரையான காலப்பகுதியில் பெல்ஜியம், லக்சம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராகவும், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் கொன்சுல் நாயகமாகவும், அதே தருணத்தில் ஹொலி சீக்கான இலங்கையின் தூதுவராகவும் (2012 ஜூலை – 2018 மார்ச்) கடமையாற்றினார்.

1995 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலும், மீண்டும் 2007 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியிலும், பொதுத் தொடர்பாடல் பிரிவிற்கு தலைமை வகித்த அதேவேளை, அமைச்சின் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஐ.தே .கட்சியின் விசேட குழு கூட்டம் இன்று

ஞானசார தேரர் உச்ச நீதிமன்ற முன்னிலையில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல்

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்