கேளிக்கை

வெளியீட்டுக்குத் தயாராகும் ‘ராதே ஷ்யாம்’

(UTV |  சென்னை) – கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட ‘ராதே ஷ்யாம்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக பொங்கல் வெளியீட்டிலிருந்து ‘ராதே ஷ்யாம்’ படம் தள்ளிவைக்கப்பட்டது.

‘ராதே ஷ்யாம்’ மட்டுமின்றி அஜித் நடித்துள்ள ‘வலிமை’, ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட படங்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ‘ராதே ஷ்யாம்’ படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். இன்று (ஜன 26) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் இதனை உறுதி செய்துள்ளார். வெளியீட்டுத் தேதியை விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கட்டிப் பிடிக்க கற்றுக்கொடுத்த ராய் லட்சுமி

விஜய் பற்றி சாய் பல்லவி ஒரே வார்த்தையில் பதில்…

இவ்வளவு விலையுயர்ந்த உடை இதுவரை அணிந்ததில்லை?