உள்நாடுசூடான செய்திகள் 1

வெளியில் செல்லல் தொடர்பில் தற்போது வெளியான புதிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய வீடுகளை விட்டு வெளியே செல்லும் அனுமதி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் மாத்திரம் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய வீடுகளை விட்டு வெளியே செல்லும் முறைமை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இருப்பினும் வீட்டிலிருந்து வெளியே செல்ல, ஒவ்வொருவரினதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை மையப்படுத்திய முறைமை கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கம் 1 அல்லது 2 இல் முடியும் நபர்களுக்கு மட்டும்  அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக  வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியளிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 3,4 என்பவற்றில் முடிவடையும் நபர்கள் செவ்வாயன்றும், 5,6 இல் முடிவடைவோர் புதனன்றும், 7,8 இல் முடிவடைவோர் வியாழனன்றும், 9, 0 இல் முடிவடைவோர் வெள்ளியன்றும் அத்தியவசிய பொருட் கொள்வனவுக்காக  வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர். என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.

Related posts

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் தொடர் விசாரணைக்கு

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு