உள்நாடு

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அரச ஊழியர்களுக்கு பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம்

(UTV | கொழும்பு) –   வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தை பிரவேசித்து தமது தகவல்களை உள்ளிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டுடன் நாட்டிற்கு தேவையான அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான துரித வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரச உத்தியோகத்தர்கள் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் மற்றும் மூப்புக்கு இடையூறு இன்றி வெளிநாடு செல்வதற்கு தேவையான சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கு அரச நிர்வாக அமைச்சுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளர்களுடன் நேற்று (06) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

கொழும்பு தவிர்ந்த சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

ரணிலின் சின்னத்தை வௌிப்படுத்தி பேரணி – 6 பேர் கைது

editor