அரசியல்உள்நாடு

வெளிநாட்டு பயணச் செலவுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் குறித்து தான் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (06) அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், தான் 5 வருட காலப்பகுதியில் 384 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக காட்டப்பட்டாலும், ஏனையவர்களின் பதவிக் காலத்தில் பாதியை மட்டுமே வெளிநாட்டுப் பயணச் செலவுகளாகக் காட்டியிருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்தபோது, ​​ஐக்கிய நாடுகள் சபை, கொமன்வெல்த், உலகின் சக்திவாய்ந்த நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான வெளிநாட்டு உறவுகள் முற்றிலுமாக முறிந்திருந்தன.

நான் அதையெல்லாம் மீட்டெடுத்து வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தினேன்.

எனது பதவிக் காலத்தில், வெளிநாட்டு மாநாடுகளில் நான் பங்கேற்கும் போது, ​​வெளிநாடுகளின் தலைவர்கள் என்னை வந்து சந்தித்து நட்புரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபடும் அளவுக்கு வலுவான வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்த முடிந்ததாக தெரிவித்தார்.

மேலும், தனது பதவிக் காலத்தில் கையெழுத்தான வெளிநாட்டு ஒப்பந்தங்கள் நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் இருந்ததாகவும் குறித்த ஒப்பந்தங்களில் உள்ள ஆவணங்கள் இன்னும் வெளியுறவு அமைச்சு மற்றும் பிற முக்கிய அமைச்சுக்களிடம் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

அத்தோடு, தான் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை 2020 முதல் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் செயல்படுத்தவில்லை என தெரிவித்த அவர், இதுவொனரு துரதிர்ஷ்டமான விடயம் எனவும் நாட்டு மக்கள் இதனை அறிந்துக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, தனது ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தேவையில்லாமல் பணத்தை வீணடிக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானம் : கல்வி அமைச்சின் அறிவிப்பு

அரசியல்வாதிகள் ஏன் மோசமாக நடந்துகொள்கிறார்கள் – மஹிந்த தேசப்பிரிய

புதிய அரசியலமைப்பு சகல சமூகங்களையும் திருப்திப்படுத்த வேண்டும் -ரிஷாட்