உலகம்

வெளிநாட்டு பயணங்களை உடனடியாக இரத்து செய்ய தீர்மானம் – திருத்தந்தை பிரான்சிஸ்

(UTV | கொழும்பு) – ஜூலை மாதத்திற்கான அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் இரத்து செய்ய புனித திருத்தந்தை பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் இவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை 2ஆம் திகதி தொடங்கவிருந்த புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆப்பிரிக்கப் பயணம் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஆப்பிரிக்க மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

85 வயதான திருத்தந்தை பிரான்சிஸ், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக சக்கர நாற்காலியில் இருந்துள்ளார்.

Related posts

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”

புத்தக விற்பனையாளருக்கு 10 வருட சிறைத்தண்டனை – சீன நீதிமன்றம்