உள்நாடு

“வெளிநாட்டு கையிருப்பு சரிந்துவிட்டது” – முஜிபுர் ரஹ்மான் [VIDEO]

(UTV | கொழும்பு) – இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் நிதி உதவிக்காக சீனாவை நம்பி இருப்பதால் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான அந்நியச் செலாவணி கிடைத்துள்ளதுடன், அரசாங்கத்தினால் அந்த கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் நிதி உதவிக்காக சீனாவை நம்பி இருப்பதால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.9 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்து. இதனால் நாட்டில் நிதி நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன், வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதுடன் உணவு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது…” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

தியானமே மனிதனை ஆன்மிக ரீதியிற் பக்குவப்படுத்தவல்லது

ஜனாதிபதி அநுரவுக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

புதிய சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கமில்லை – அருட்தந்தை சிறில்காமினி.