உள்நாடுசூடான செய்திகள் 1

வெளிநாட்டிலுள்ளவர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா – தமிழ் விண்ணப்பம்

(UTV | கொழும்பு) –

வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் தமிழ் பேசும் மக்கள் அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சகல வெளிநாடு தொழில்களுக்காக சென்று இருக்கும் பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கற்றல் உபகரணங்கள் (10000 ரூபாய் பெருமதியான பொதி) கொடுக்கப்படும் என கூறி இப்பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி மூலம் விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கபப்பட்டிருந்தன.

பின்னர் தமிழ் மொழி மூலம் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படும் என கூறி சில அலுவலகர்கள் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு தனிச்சிங்கள மொழி மூல விண்ணப்பப படிவங்களை வழங்கி உடனடியாக பூர்த்தி செய்து தரவேண்டும் என வற்புறுத்துவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்த மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அடுத்த புதிய கட்சி மஹிந்த தலைமையில் !

ஜனாதிபதிக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ தாயகம் வந்தது