உள்நாடு

வெளிநாட்டிலிருந்து வந்த மாவனெல்லை ரஷாட் மாயம்!

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளார். கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய 23 வயதான மாவனெல்லை சபியா வத்தையை சேர்ந்த,  A.S.முஹமட் ரஷாட் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.

கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதும், இதுவரை வீடு வந்து சேரவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய விமான நிலைய CCTV காணொளிகளின் படி கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மாலை 6:35 மணியளவில் வெளியேறி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதன் பின்னர் எந்த வாகனத்தில் யாருடன் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் இதுவரைக்கும் இல்லை. இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், அறியத்தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே ரஷாட் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு வேண்டுகிறோம்.

தாய் : 077 114 5645  தந்தை : 077 186 5828

———————————
🎯 UTV News WhatsAppGroup :
https://chat.whatsapp.com/IZ61VE6YMThGQ0fJYgLqvK

Related posts

இன்று ரணில் அநுரவுக்கு பாசம் – அநுர ரணிலுக்கு பாசம் – சஜித்

editor

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்[VIDEO]

ஆர்.சம்பந்தனிடம் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்