கிசு கிசு

வெளிநாட்டவர்களை பராமரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை [VIDEO]

(UTV|மட்டக்களப்பு) – அந்நிய நாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

கொரொனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாறு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்த ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள தமிழ் உணர்வாளர் அமைப்பு, “இத்தாலி, ஈரான், தென்கொரிய நாட்டில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு, அவர்களில் கொரோனா அறிகுறிகள் தென்படுவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டு பிரஜைகளை கொரனாவில் இருந்து பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஆனால் வெளிநாட்டவர்களை அழைத்துவந்து பராமரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்ததில் இருந்து எமது மாவட்டத்தினை பாதுகாக்க வீட்டுக்குள் முடக்கி வீதிகளை வெறிச்சோடச்செய்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்” எனதெரிவித்துள்ளது.

Related posts

மனதை நெகிழவைக்கும் சம்பவம் -சிசுவுக்கு பாலூட்ட முன்வந்த 9 தாய்மார்

ஆமானு சொல்லு, இல்லைன்னு சொல்லு-சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள்

தனித்துப் பயணிக்க முடியாது