உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து

நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (20) காலை 8 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பேருந்தை கவனக்குறைவாக முந்திச் செல்ல முற்பட்டபோது, ​​முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்தபோது, ​​முச்சக்கர வண்டி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ஒன்றின் மீதும் மோதியுள்ளது.

விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகளுக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்தன.

இரண்டு வெளிநாட்டினரும் நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில், நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்ல பகுதிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வாழைப்பழங்கள் விலை அதிகரிப்பு

கடவத்தை துப்பாக்கிச் சூடு: விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள்

வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா ? தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor