உள்நாடு

வெளிநாட்டவர்களுக்கான வருகை மற்றும் புறப்பாடு சேவைகளுக்கான ஒன்லைன் வசதி

(UTV | கொழும்பு) –  அடுத்த வருடம் முதல் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான வருகை அட்டைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறுவோரின் புறப்பாடு அட்டைகள் புதிய முறையின் மூலம் சரிபார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இரு தரப்பினரும் தங்கள் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தங்கள் அட்டைகளை www.immigration.gov.lk அல்லது https://eservices.immigration.gov.lk என்ற திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு ஊடாகப் ஒன்லைனில் நிரப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிவாயு விலையில் மாற்றம் இல்லையாம்.

தகனம் மற்றும் அடக்கம் குறித்த நிபுணர் குழு கூட்டம் இன்று

அநுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்

editor