சூடான செய்திகள் 1

வெளிநாட்டவர்களின் சடலங்களுடன் திருமலை துறைமுகத்தில் கப்பல்

(UTV|COLOMBO)-  பிரான்ஸ் நாட்டிலிருந்து 4 ஆயிரம் மெற்றிக் தொன் கேஸ் (வாயு ) தாங்கிய நிலையில் இந்தியாவுக்கு லைபீரிய கொடியுடன் சென்ற GAS AEGEAN என்ற கப்பலில் இருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இறந்துள்ளனர்.

இரு வெளிநாட்டவர்களும் கடந்த 8 ஆம் திகதி இறந்துள்ளபோதிலும் அவர்களின் உடல்களை கப்பலில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அங்கிருந்தவர்கள் பாதுகாத்து எடுத்துவந்துள்ளனர்.

இருவரும் உக்ரைன்,ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கப்பல் இலங்கையின் தென்பகுதியில் காலி கடற்பரப்பில் பயணித்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில், திருகோணமலை துறைமுகத்திற்கு மேற்படி கப்பல் இறந்த இரு வெளிநாட்டவர்களின் உடல்களுடனும் வந்தடைந்துள்ளது.

இருவரும் இறந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத போதிலும் விசாரணைகள் பலகோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் துதூவராலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்!

தங்கம் கடத்திய 4 பெண்கள் கட்டுநாயக்கவில் கைது

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு