உள்நாடு

வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

`(UTV | கொழும்பு) –  வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் தகவல்களைப் பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது சம்பந்தமாக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

இதன் படி, 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 24 மணித்தியால தகவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மூன்று ஆளுநர்கள் இராஜினாமா

editor

ரஞ்சித் மத்துமபண்டார தே.ம.ச.கூட்டணியின் கீழ் தேர்தலுக்கு

2025 முதல் நடைமுறைக்கு வரும் இ-கடவுச்சீட்டு