உள்நாடு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக ´இலங்கையை அழையுங்கள்´

(UTV| கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் ´இலங்கையை அழையுங்கள்´ என்ற வழிமுறையை நேற்று (26) முதல் வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இந்த வலை இணைப்பு அமைச்சின் இணைய தளமான www.mfa.gov.lk இல் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்குள் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணைய முகவரியை பயன்படுத்தி அணுகலாம்.

கொரோனா வைரஸ் பரவல் போன்ற அவசர நிலைமைகளின் போது வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் இந்த தளத்தில் தம்மை பதிவுச்செய்து தமது உதவிகளை வழங்க முடியும்.

Related posts

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை

editor

சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் திறக்கப்படும்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு – ஜீவன்