உள்நாடு

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

நாட்டில் தற்பொழுது காணப்படும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குப் பின்னரே காணப்படுகின்றதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களை ஏழு நாட்களுக்குப் பிறகு வீடுகளுக்கு அனுப்ப முடியாது என்றும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நகர, மாநகர மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலம் நீடிப்பு

இன்று இதுவரையில் 356 தொற்றாளர்கள் பதிவு

அடுத்த வாரம் முதல் சீனி விலையை குறைக்க நடவடிக்கை