சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டிய பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) -ஒரு கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நேற்றிரவு(21) வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றன.

வெல்லம்பிட்டிய, வென்னவத்த பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடம் இருந்து 1 கிலோ 107 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போதைப்பொருளுடன் மூவர் கைது

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது