உள்நாடு

வெலிசறையில் 225 கிலோகிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது

(UTV | கொழும்பு) -வெலிசறையில் 225 கிலோகிராம் ஹெரோயினுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹெரோயின் பெறுமதி ரூ. 225 கோடிக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மஹபாக விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது றாகம வெலிசர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 24, 30,50 மற்றும் 55 வயதுடைய வெலிசர மற்றும் ஹோமாகம பகுதகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்களை இன்று கொழும்பு நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளது.

 

Related posts

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

புதிதாக 261 கொரோனா நோயாளிகள் [UPDATE]

அடிப்படைவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது