உள்நாடு

வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – நேற்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு திசையில் பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த மோட்டர் வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றிருந்தது.

16 வயதுடைய சிறுவன் செலுத்திய அதிசொசுகு ஜீப் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னிப்பு கேட்கிறேன்- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி 

நில அதிர்வுகள் தொடர்பில் விசேட ஆய்வு

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு