உள்நாடு

வெற்றிலைக்கேணி கடலில் ஒன்பதுபேரை கைது செய்த கடற்படை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பொன்றை முன்னெடுத்து  13.04.2024 புதன் கிழமை  மருதங்கேணி கடற்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக இலை குழைகளை பயன்படுத்தி  கணவாய் மீன்  பிடிப்பதற்காக இலைகுளைகளை  ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகை வெற்றிலைக்கேணியில் கடற்படை வழிமறித்து கைது செய்துள்ளனர்.
இதே வேளை மின் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டிலும்  ஒருவர் நேற்று கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது  நேற்று காலை 13/03/2024  கட்டைக்காடு கடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு  கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழில்  செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில்  கடற்படையினரால்  அண்மை நாட்களாக பலர் கைது செய்துள்ளனர்.
கைது  செய்யப்பட்ட  ஒன்பது  சந்தேக நபர்களையும்  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

சீரற்ற வானிலை – A/L பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு

editor

நாளை முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை