விளையாட்டு

வெற்றியுடன் நாடு திரும்பிய மலிங்க!

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அனைத்து மாகாண கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இதன்படி , இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத் திடலில் ஏஞ்சலோ மெத்திவ்ஸின் தலைமையிலான தம்புள்ளை அணியும் மற்றும் தினேஸ் சந்திமாலில் தலைமையிலான கொழும்பு அணியும் மோதுகின்றன.

இதேபோல் , பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெறும் மற்றுமொரு போட்டியில் திமுத் கருணாரத்ன தலைமையிலான கண்டி அணியும் மற்றும் லசித் மாலிங்கவின் தலைமையிலான காலி அணியும் மோதவுள்ளன.

அதேவேளை ,நேற்று சென்னை அணியுடன் இடம்பெற்ற போட்டியை தொடர்ந்து அனைத்து மாகாண கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக லசித் மாலிங்க இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.

 

 

 

 

Related posts

LPL தொடருக்கு யாழில் இருந்து மூவர் தெரிவு

சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டி – இலங்கை அணிக்கான பயிற்சிப் போட்டி இன்று

போட்டியில் இருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்…