உலகம்

வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

(UTV | பாகிஸ்தான்) –  தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட பின்னர் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர்.

சபா மற்றும் மர்வா பீபீ ஆகிய இருவருக்கும் சுமார் 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மூன்று வேறுபட்ட அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

லண்டனிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களை 100 பேர் கொண்ட மருத்துவ குழு பராமரித்தது.

இரட்டையர்களின் மூளை வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த இரத்த நாளங்கள் மட்டுமே இருந்ததாகவும் அறுவை சிகிச்சையின்போது இருவரில் ஒருவருக்கு மட்டுமே அதை அளிக்க முடியும் என்ற சவாலான சூழ்நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றன.
இரட்டையர்களில் பலவீனமானவராக இருந்த மார்வாவுக்கு இவை வழங்கப்பட்டன.

இதன் விளைவாக சஃபாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் அவரது மூளையில் நிரந்தர சேதம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு நடப்பது என்பது வாழ்க்கை முழுவதும் இயலாத விடயமாக இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ சவூதி அரேபியாவின் முன்மாதிரியான திட்டம்

கரீபியன் தீவில் சுனாமி எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது