சூடான செய்திகள் 1

UPDATE வெயாங்கொட சிறுவர் பூங்கா சம்பவம் – இன்று 13 வயது மகள் பலி!!

(UTV||COLOMBO) வெயங்கொடை – நைவல  பகுதியில் அமைந்துள்ள  பூங்காவின்  ராட்டினம்  உடைந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழந்துள்ளார்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாயார் உயிரிழந்த நிலையில் , அவரின் மகள் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.


வெயாங்கொட – நயிவலவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர் பூங்காவை பராமரித்துவந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெயாங்கொட நயிவலவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் நேற்று ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் குறித்த பெண்ணின் மகள் படுகாயமடைந்துள்ளார்.

 

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை

“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?” முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில்