வகைப்படுத்தப்படாத

வெனிசுலா சிறைக்குள் மோதலில் 29 பேர்உயிரிழப்பு

சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது.

வெனிசுவேலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொண்டதாகவும் கலவரத்தை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதன்போது 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை கைதிகளைப் பார்வையிடச் சென்ற ஒருவரை கைதிகள் பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டுள்ளனர். அவரை மீட்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கலவரம் மூண்டதாக கைதிகள் உரிமைக்கான அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

 

Related posts

நானாட்டான் பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!

Met. forecasts slight change in weather from today

Australian High Commissioner calls on Raghavan