சூடான செய்திகள் 1

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) திருகோணமலை – இறக்கக்கண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்போது  215 டெட்டனேட்டர்களும் 51 ஜெலட்னைட் குச்சிகளும் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று முற்பகல் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக குச்சவௌி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

வானிலை அவதான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் திங்கட்கிழமை மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

ரமித் றம்புக்வெல்லவிற்கு வாகனம் செலுத்த தடை