உள்நாடு

வெடிப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது

(UTV | கொழும்பு) – அனுமதிப்பத்திரம் இன்றி வெடிப்பொருட்களை கொண்டுச் சென்ற 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

நாவுல, எலஹெர வீதியின் பகமுண பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் வைத்து குறித்த வெடிப்பொருட்கள் மீட்கக்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, 3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 வோடர் ஜெல் குச்சிகள், 20 கிராம் வெடி மருந்து, 14 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் இதன் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

Related posts

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதியின் தைத்திருநாள் வாழ்த்து

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு

editor