உள்நாடுசூடான செய்திகள் 1

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

(UTV | கொழும்பு) -வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதில், விகாரைகளுக்கு சென்று வழிபடும் போது தனி மனித இடைவெளிகளை கடைபிடிப்பது கடினம் என்பதால் இயன்றளவு வீடுகளிலேயே வழிபாட்டு நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வெசாக் உற்சவம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளும் பொருத்தமான சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப பின்பற்றப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து அனைவரையும் பாதுகாக்க குறித்த வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் முற்றுப் பெறுகிறது…

விக்னேஸ்வரனின் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை

பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறு – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.