உள்நாடு

வெங்காயம் விலை மாற்றம் !

(UTV | கொழும்பு) –    இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரியவருகிறது.

இந்த தடைக்கு மத்தியிலும் இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை எனவும் இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக விலையில் பெரிய வெங்காயத்தை வாங்குவதற்கு மற்ற சந்தைகளை நாடுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், இலங்கை போன்ற நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, உற்பத்தி வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை இருமடங்காக உயர்ந்ததை அடுத்து, டிசம்பர் 8, 2023 அன்று ஏற்றுமதியைத் தடை செய்தது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலை போட்டி இன்றி ஜனாதிபதியாக்க வேண்டும்

நளின் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்