வகைப்படுத்தப்படாத

வெகு விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏறக்கவுள்ளார் சசிகலா!!

(UDHAYAM, CHENNAI) – தமிழக சட்ட மன்ற குழு தலைவராக அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நியமிக்கப்பட்டுள்ளமையானது, மக்களினதும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கும் விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் மு.கா ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் தெரிவு நியாயமற்றது

அது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்ட மன்ற குழு தலைவராக அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் பொதுச் செயலாளராக நேற்று சசிகலா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தின் 12வது முதலமைச்சராக வி.கே சசிகலா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

வி.கே சசிகலா நாளை அல்லது எதிர்வரும் 9ஆம் திகதி தமிழக முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி தமிழகத்தின் 12வது முதலமைச்சராகவும் 3வது பெண் முதலாமைச்சராகவும் சசிகலா பதவியேற்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவுக்கு விஜயம்

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி முடிவு

Bread price goes back down