உள்நாடு

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின்படி இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு அல்லது இவ்வாண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட வெகுசன ஊடகவியலாளர்களிடம் இருந்து மாத்திரம் தகவல்கள் திரட்டப்படவுள்ளன.

அதற்கமைய விண்ணப்பப்படிவத்தை தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் இணையதளம் ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அமைச்சுக்கு வருகை தருவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குறித்த விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ‘பணிப்பாளர் (ஊடகம்), தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இல.163,‘ எதிசிதி மெதுர’, கிருலப்பனை வீதி,பொல்ஹேன்கொட, கொழும்பு – 05. ‘ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக 011-2513645 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிந்துகொள்ள முடியும் என்று அமைச்சின் ஊடகப்பிரிவுதெரிவித்துள்ளது.

Related posts

ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

SLFP மத்திய குழு இன்று கூடுகிறது

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்ப தயார்