உள்நாடுபிராந்தியம்

வீதியை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி கோர விபத்து – ஒருவர் பலி

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் கோரகபல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 64 வயதான நபர் உயிரிழந்ததுடன், இந்த விபத்து சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

நேற்று (23) இரவு 11.30 மணியளவில் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, கந்துருதுவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கோரகபல பகுதியில் வீதியை கடக்கும்போது, ​​வேகமாக வந்த கார் குறித்த நபர் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததுடன், காரின் சாரதி பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று பாராளுமன்றத்தில்

கொரோனா தடுப்பூசி அட்டையினை உடன் வைத்திருத்தல் அவசியம்

MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்