அரசியல்உள்நாடு

வீதியால் பயணித்த ரிஷாடின் ஆதரவாளர்கள் மீது வழிமறித்து மஸ்தானின் ஆதரவாளர்கள் தாக்குதல்

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி.

குறித்த வீதியால் பயணித்த ரிஷாட் பதியுதீனின் வாகனம் உட்பட அவரின் ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்களை அடித்து நொறுக்கிய காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள்.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதானவீதிக்கு அருகாக நேற்று (11) இரவு 8 மணியளவில் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது.

இதவேளை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத்தொடரணிகள் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.

இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டதுடன் அது கலவரமாகியது.

கலவரத்தில் ரிஷாட் பதியுதீனின் வாகனத்தொடரணி அடித்து நொறுக்கப்பட்டது.

அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் அடித்து நொருக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களால் அடித்து நொருக்கப்பட்டன.

குறித்த சம்பவத்துக்கும் ரிஷாட் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை வீதியால் பயணித்த வாகனங்களே தாக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கலுக்கு பாதுகாப்பு வழங்கிதோடு ரிஷாட் பதியுதீனின் வாகனம் உட்பட ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்ட போது அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்கள்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் பொலிஸ் தரப்பு இன்று நடத்திய ஊடக சந்திப்பில் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் ஹு காட்டியதால் தான் வாகனங்கள் தாக்கப்பட்டதாக கூறி இருக்கிறார்கள் வாகனங்கள் தாக்கப்பட்டது சரி என்றே பொலிஸ் தரப்பு கூற வருகிறதா ? வீதியில் பயணித்த வாகனங்களை தாக்குவது சரியா ? பொலிஸார் கூட பக்கசார்பாக நடந்து கொள்வது கவலைக்குரிய விடயமே

Related posts

கடவுச்சீட்டு பெற வருபவர்களுக்கு விசேட சலுகை

அறுகம் குடாவிலிருந்து இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேறவேண்டும்

editor

கொவிட் மீண்டும் தலைதூக்குகிறது