வகைப்படுத்தப்படாத

வீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா?உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா

வீட்டில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் எளிமையான வழிகளாக:

  •  சில துளிகள் வெனிலா எசன்ஸை எடுத்து சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். அதை துணியில் நனைத்து வீட்டில் உள்ள மர தளபாடங்கள் , மின் குமிழ்கள் ஆகியவற்றைத் துடையுங்கள். அப்படி செய்தால் அதில் துர்நாற்றங்கள் போய், வெனிலா பிளேவர் வாசனை கமகமக்கும்.
  • எலுமிச்சையும் கிராம்பும் சமயலறையில் கருகிய தீய்ந்து போன வாசனை ஏதேனும் வந்தால்  ஒரு கப் தண்ணீரில் 3 வட்டமாக நறுக்கிய எலுமிச்சை துண்டுகளையும் அதோடு சில கிராம்புகளையும் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். அது கொதிக்க கொதிக்க அறையைச் சுற்றி வந்த தீய்ந்து போன வாசனை காணாமல் போய்விடும். இது பூண்டு மற்றும் வெங்காயத்தின் நாற்றத்தையும் நீக்கிவிடும்.
  • மீனின் வாசனையை வீட்டிலிருந்து போக்குவதற்கான மற்றொரு ஈஸியாக பொருள் பட்டை. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் பட்டையை அப்படியே உடைத்தோ அல்லது பொடியாகவோ போட்டு கொதிக்க விடுங்கள். மீன் வாசனை ஓடிவிடும்.

Related posts

වර්ජනය නිසා කාර්යාල දුම්රිය කිසිවක් ධාවනය වී නෑ

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய கிலுயுயே எரிமலை

19 ரஷ்யர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை