உள்நாடு

வீட்டைச் சுத்தம் செய்வதற்கு 10ஆயிரம் வழங்கும் அரசு – சாகலவின் அறிவிப்பு


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

வீட்டைச் சுத்தம் செய்வதற்கு இந்தப் பணம் வழங்கப்படுவதாகவும், அனர்த்தம் காரணமாக பகுதி அளவில் அல்லது முழுமையாக சேதம் அடைந்த அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர், அடுத்த நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களின் நலன்களைத் தேடியறியும் நோக்கில் நேற்று கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைப் பார்வையிட்ட சாகல ரத்நாயக்க, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கொலன்னாவ ஸ்ரீ சம்புத்தராஜ புராண விகாரையில் நடைபெற்ற நடமாடும் மருத்துவ முகாமிற்கும் சென்று பணிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர், கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார்

Related posts

ஜனாதிபதித் தேர்தலில், பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் – நாமல் உறுதி

மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவு

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி