உள்நாடு

சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது, வரிசையில் நிற்க வேண்டாம் – லிட்ரோ

(UTV | கொழும்பு) – லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று வீட்டு உபயோகத்திற்காக விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டு உபயோகத்திற்காக விநியோகிக்கப்படாது என்பதால், எரிவாயு விநியோக நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு எரிவாயு கையிருப்பு தீர்ந்துவிட்டதால், தொழிற்சாலை தேவைகளுக்கு மட்டுமே எரிவாயு சிலிண்டர்கள் வெளியிடப்படும் என்றும், இதற்கிடையில், தலா 3,500 மெட்ரிக் டன் அளவிலான இரண்டு எரிவாயு ஏற்றுமதிக்காக 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இன்று செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

எரிவாயு இருப்புக்கள் எதிர்வரும் வியாழன் மற்றும் சனிக்கிழமைக்கு இடையில் இலங்கையை வந்தடையும் என லிட்ரோ தலைவர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதியின் மீலாத் வாழ்த்துச் செய்தி

லலித் வீரதுங்க – அனுஷ பெல்பிட : அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை

மாவடிப்பள்ளி பாலத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் – சந்தேக நபர்கள் அரபுக் கல்லூரிக்குள் நுழைந்தால் பிணை இரத்து

editor