உள்நாடு

வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாட்டுக்கு அனுப்ப தடை

(UTV | கொழும்பு) –  இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டுப் பணிப்பெண்களை சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் செல்வதை தடை செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், திறமையற்ற துறைகளுக்கு பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்வதை நிறுத்துமாறு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுலா வீசாவில் பெண்கள் தொலைந்து போவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வந்த 586 பெண்களை இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவினர் திருப்பி அனுப்பியதாகவும் அதன் தலைவர் மகேந்திர குமாரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஓமான் சென்ற விசேட புலனாய்வுக் குழு, சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம், தாக்குதல், துன்புறுத்தல் மற்றும் விபச்சார விடுதிகளுக்கு விற்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்று ஓமானுக்கு விஜயம் செய்து பாலியல் அடிமைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.

சுற்றுலா விசாவில் சென்ற பெண்களை விலை கொடுத்து பெற்றுக் கொண்டதால், இலங்கை தூதரகத்தால் அந்நாட்டு சட்டப்படி பெண்களை இலங்கைக்கு அனுப்ப முடியாது என இங்கு தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு வெளிநாட்டில் வேலை செய்வதாகக் கனவு காண்பது போன்று நடித்து பணத்தை மோசடி செய்ததாக 570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

Related posts

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ – அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

editor

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இரத்து

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா