உள்நாடுபிராந்தியம்

வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி

மெதகம, மெகல்லகம பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்து குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மல்கஸ்தலாவ, மெகல்லகம பகுதியில் வசிக்கும் 1 வயது 2 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணையில் தாய் வீட்டில் இருந்த போது, ​​வீட்டின் முன் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

சடலம் மெதகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கைக்கு தற்காலிக பூட்டு

எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

நாடாளுமன்றில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்