அரசியல்உள்நாடு

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யத் தடை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று (4) உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வருவதாக ஏராளமான புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு இடையூறாக இருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் நடத்தப்படும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

Related posts

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 2வது அமர்வு[VIDEO]

பாடசாலை மாணர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – 6,000/- கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி

editor

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது