(UTV | இங்கிலாந்து) – பிரித்தானியாவில் பெரும்பாலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில் பிரித்தானிய பிரதமர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
இதற்கமைய, முகக்கவசம் அணிய வேண்டிய நடைமுறையை பின்பற்ற வேண்டியது சட்ட ரீதியாக கட்டாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் சுமார் 16 மாதங்களாக நடைமுறையிலிருந்த வீடுகளிலிருந்து பணிபுரியும் முறைமை நீக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையின் இறுதிக் கட்டம், எதிர்வரும் 19 ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய கொவிட் தொற்று நிலைமை தொடர்பான தரவுகளை ஆராய்ந்து, எதிர்வரும் 12 ஆம் திகதி இவற்றை உறுதிப்படுத்தவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களுக்கான சுயதனிமைப்படுத்தல் நடைமுறை தொடருமென அவர் அறிவித்துள்ளார்.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)